காவல்துறையினர் அருகில் இருக்கும் போதே முதியவர் ஒருவர் செல்போன் திருடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜீப்புடன் கொத்தாக நின்ற போலீஸ்! ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் கெத்தாக முதியவர் செய்த பகீர் செயல்! வைரல் வீடியோ!
சிட்லபாக்கம் காவல் எல்லைக்குள்ளே திருமலை நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் வாசலில் 2 அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிரே ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
அவ்வழியாக செல்லும் முதியவர் ஒருவர் யாரும் பார்க்காத நேரத்தில், ஆட்டோவில் பின்புறத்திலிருந்து செல்போன் ஒன்றை திருடி செல்கின்றார். இந்த சம்பவமானது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.