எண்ணெய்யை அப்படியே உறிஞ்சும் அதிசய லிங்கம்! ஏன்? எங்குள்ளது தெரியுமா?

ஆடுதுறைக்கும் உப்பிலியப்பன் கோவிலுக்கும் இடையில் உள்ளது திருநீலக்குடி என்னை சிவசேத்திரம்.


இங்குச் சிவபெருமான் இரு தேவியருடன் காட்சி அளிக்கிறார். ஒரு அம்பாள் கன்னியாகவும் ஒருவர் கல்யாணக் கோலத்திலும் காட்சி கொடுக்கிறார்கள். நீலகண்டர் என்ற பெயரும் உண்டு. திருவிடைமருதூர் ஆதீனத்திற்குச் சொந்தமான ஊர். தலவிருட்சம் வில்வம். இங்கு வில்வத்திற்கு ஐந்து இதழ்கள் உண்டு.

திருநீலக்குடியில் சிவனுக்கு தைலக்காப்பு மிகவும் விசேஷமானது. சுவாமி கோபத்தைத் தணிக்க அம்பாள் தைலம் சார்த்தி கோபத்தை தணிப்பதாக தலபுராணம்.

தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது.

கார்த்திகை சோம வாரங்களில் 5 லிட்டர் எண்ணெய்யைக் குருக்கள் தேய்த்து விட எல்லா எண்ணெயும் உறிஞ்சிவிடும். வழியாது. லிங்கம் அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தைப் பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது சிவ லிங்கத்தின் திருமேனி.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை சிவன் உண்ட கதை நமக்கு தெரியும். அந்த நஞ்சின் விஷத்தன்மையை குறைக்கவே இந்த கோவிலில் இப்படி ஒரு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்.

இத்தலத்தின் உள்ளே ஒரு பலாமரம் உள்ளது. அதை முழுபழமாக எடுத்துச் செல்லக்கூடாதாம். இறைவனைக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்து விடுவாராம்.

தீராத தலைவலி நீங்க தைலக்காப்பு பிரார்த்தனை பலர் செய்துவருகிறார்கள்

பேருந்து மூலமாக ஆடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்து உப்பிலியப்பன் கோவில் வழியாகவும் இங்கே வரலாம்.