அறநிலையத்துறை பெண் அதிகாரி குளியல் அறையில் பேனா கேமரா! 50 வயது ஆண் அதிகாரியின் விபரீத செயல்!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை பார்க்கும் பெண் அதிகாரியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த புகாரில், இணை ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மதுரை மண்டலத்தில் இந்து சமய அறநிலைய அதிகாரியாக பச்சையப்பன் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு கீழே பணிபுரியும் இணை ஆணையரான பெண்ணொருவருக்கு பாலியல் ரீதியில் தொந்தரவுகளை அளித்துள்ளார். சமீபத்தில் அதிகாரிகள் சதுரகிரி  மலைகோவில் சென்றிருந்தனர்.

அப்போது பெண்கள் ஓய்வறையில்  கேமராவை பேணாவில் வைத்து பெண் அதிகாரிகளின் ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் அதிகாரி மதுரை மண்டல காவல்துறை ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். தன்னை பலமுறை உல்லாசத்திற்கு வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.

ஆசைக்கு இணங்க மறுத்தபோதெல்லாம் ஆபாச புகைப்படத்தை வைத்து தன்னை மிரட்டியதாகவும் பெண் அதிகாரி புகாரில் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பச்சையப்பனை மதுரை பேரையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு, பச்சையப்பன் மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவாகியுள்ளன. 

2014-ஆம் ஆண்டில், சதுரகிரி கோவிலில் விலை மதிப்புமிக்க சிலை ஒன்று திடீரென மாயமான வழக்கும் இவர் மீதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.