சூப்பர் ஸ்டாருடன் நெருக்கமாக போஸ்! வைரலாகும் இளம் பெண்! யார் தெரியுமா?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் தர்பார் படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபோஸ்மித்தா பட்நாயக். அம்மாநிலத்திலுள்ள எபரலாகேமுண்டி எனும் பகுதியில் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் கதக்களி,ஒடியா ஆகிய நடனங்களில் தேர்ச்சி பெற்றவராவார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அடுத்த வருடம் வெளியாக தயாராக இருக்கும் "தர்பார்" எனும் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, பாலிவுட் நடிகர்களான சுனில் ஷெட்டி, தலிப் தாஹில், பிரதேய்க் பாபர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். "டான்ஸ் இந்தியா டான்ஸ்", "டான்ஸ் தீவானே", "வூகி பூகி" ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் மும்பையில் பிரபல பாலிவுட் கொரியோகிராஃபரான சக்தி மோகனின் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். 

இருப்பினும் மீண்டும் ஒடிசா மாநிலத்திற்கு நிச்சயம் வருவதாகவும், நடனமே தன்னுடைய உயிர் என்றும் கூறியுள்ளார். பட வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பதாக கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகிலிருந்து இவருக்கு 2 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் தர்பார் திரைப்படத்தில் நடித்திருப்பது, தான் முற்காலத்தில் செய்த புண்ணியம் என்று கூறியுள்ளார்.

இவர் அந்த திரைப்படத்தில் நடன மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இவருடைய நடிப்பு திறமையை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.