கொரோனா ஒழிப்பு நிதிக்கு ரூ.1 கோடி கொடுத்த ஓபிஎஸ்சின் 2வது மகன்..! திமுகவே வெறும் ரூ.1 கோடி தான்!

கொரோனா ஒழிப்பு நிதியாக திமுகவே ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது மகன் ஜெயபிரதீப் ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார்.


நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் நன்கொடை வசூலித்து வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக நன்கொடை கோரியுள்ளனர். இதனை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதியை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது மகன் ஜெயபிரதீப் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் மூலம் தனி நபராக அதிக நிதி கொடுத்தவர்கள் பட்டியலில் ஜெயபிரதீப் இடம்பெற்றுள்ளார். அதே சமயம் கொரோனா ஒழிப்பு நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அடுத்த ஆட்சி அமைக்க யோசனை தெரிவிக்கும் பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்திற்கு சுமார் 350 கோடி ரூபாய் வரை திமுக கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்கு வெறும் 1 கோடி ரூபாயைத்தான் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.