அமெரிக்காவில் விருதுகளை அள்ளி குவித்த ஓபிஎஸ்! காரணம் இதுதான்!

அமெரிக்காவில் அரசு முறை பயணமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழகம் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு விருதுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவ.8 முதல் நவ.17 வரை 10 நாட்கள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நவ.8-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்ட அவர் அமெரிக்காவிலுள்ள சிகாகோ சென்றடைந்தார். 

நேற்று உலக வங்கியின் தலைமை அலுவல‌த்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  பல்வேறு துறை முதலீடுகள் சார்ந்து பேச்சுவார்தைகள் நடத்துவது மட்டுமல்லாமல் அவர் அங்குள்ள தமிழ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்திருக்கும் சிறு மற்றும் குறு தொழில்கள் முனையும் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் மகனும் தேனி மாவட்டத்தின் மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமார், தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக 'ரைசிங் ஸ்டார் ஆப் ஆசியா- இன்டர்நேஷனல்' என்னும் விருது அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு மேலும் ஒரு விருது கிட்டியுள்ளது. அதாவது "பொது சேவை ஆற்றும் சாதனையாளர்" என்ற விருதை அவருக்கு அளித்து அமெரிக்கா கௌரவப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.