கருணாநிதிக்கு ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை! துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி!

மறைந்த கலைஞர் கருணாநிதி தன்னுடைய மகன் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் அவரை முதல்வராக பதவியேற்க விடவில்லை என்று தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடியாக கூறி இருக்கிறார்.


சென்னை ஐயப்பன்தாங்கலில் அதிமுக கட்சியின் சார்பில் கூட்டமொன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் என பலரும் பங்கேற்று பேசி இருந்தனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் திமுக கட்சியை பற்றியும் விமர்சனம் செய்ய துவங்கினார். அப்போது பேசிய அவர் ஸ்டாலினால் என்றுமே தமிழக முதல்வராக பதவி வகிக்க முடியாது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் கலைஞர் கருணாநிதிக்கு தன் மகன் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாததால் தான் அவரை முதல்வர் பதவியில் அமர வைக்க வில்லை என்று கூறினார்.

கருணாநிதியின் உடல் நிலை சரி இல்லாதபோதிலும் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியை அவர் வழங்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். இது அவர் மீது நம்பிக்கை இல்லாத தனத்தை நமக்கு தெளிவாக காண்பிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தந்தைக்கே தன் மகன் மீது நம்பிக்கை இல்லாத பொழுது எப்படி தமிழக மக்கள் தன்னை நம்புவார்கள் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

ஆகவே ஒருபோதும் ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது என ஓபிஎஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. துணை முதல்வர் ஓபிஎஸ் இன் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஓபிஎஸ் இந்த கூற்றுக்கு திமுக கட்சியை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.