இபிஎஸ் முதலமைச்சரானதை அதிசயம் என்பதா? ரஜினிக்கு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்!

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனது அதிசயம் என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள், அதிசயம் நடந்ததால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார் என்ற ரஜினியின் கருத்து கண்டனத்துக்குரியது. தேர்தல் எப்போது எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனவும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழில் முனைவோர் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். நான் அவர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளேன் எனவும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அமெரிக்காவில் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.