தேனி! ஓபிஎஸ் மகன் விஸ்வரூம்! ஈவிகேஎஸ், தங்க தமிழ்செல்வன் மாயம்!

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் OPS மகன் முன்னிலையில் உள்ளார்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு  எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.இதில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வந்தவண்ணம் உள்ளன. 

 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேனி  மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் OPS மகன் ரவீந்திரநாத் குமார் முன்னிலையில் உள்ளார். இவர் சுமார் 15000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்ட  ஈவிகேஎஸ் இளங்கோவன் பின்னடைவில் உள்ளார். காலை நிலவரப்படி ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 35 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.