முகத்தில் கரும்புள்ளி நீக்கும் மேஜிக் ஜாதிக்காய் !!

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய், ஒரு மருத்துவப் பொருளாகவே பார்க்கப்படுகிறது. இதனை வீட்டில் அனைவரும் வாங்கி பயன்படுத்தினால், எதிர்பாராத அளவுக்கு அதிக பயன்பெற முடியும்.


·         முகப்பரு, கரும்புள்ளி இருப்பவர்கள் ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பூசிவந்தால் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

·         ஜாதிக்காய் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், உடல் வலிகளை நீக்குவதற்கு பயன்படுகிறது. தசை பிடிப்பு, மூட்டுவலி இருக்கும்போது பூசிக்கொள்ளலாம்.

·         குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு உப்புசம் பிரச்னைக்கு, ஜாதிக்காயை தண்ணீரில் கொஞ்சமாய் கலந்துகொடுத்தால், விரைவில் பலன் தெரியும்.