ஓரினச்சேர்க்கை! உற்ற தோழியின் இளம் மகளை கடத்திய விபரீத பெண்மணி! கன்னியாகுமரியில் பரபரப்பு!

நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை அவரது தாயாரின் தோழியான நடுத்தர வயது பெண் வசியம் செய்திருக்கும் சம்பவமானது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இங்கு நர்சிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயின்று வரும் இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார்.  அதே கல்லூரியில் படிக்கும் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக பழக தொடங்கினார். அந்த பெண்மயின் தாயாரும் நர்சிங்க மாணவியின் தாயாரும் தோழிகள்.

இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட பெண் அடிக்கடி செல்லும் வழக்கத்தினை வைத்துக்கொண்டார். சில நாட்களிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் நடவடிக்கைகளில் அவருடைய தாயார் பல்வேறு மாற்றங்களை கண்டுபிடித்தார். இதனை கண்டு பெரிதும் அதிர்ச்சி அடைந்த அவர், காரணத்தை கண்டு பிடிக்க திட்டமிட்டார்.

கண்டுபிடிக்க இயலாததால் தன் மகளிடமே நேரடியாக கேட்டார். அப்போது அவர் தோழியின் தாயார் தன்னுடன் நெருக்கமாக பழகுவதாகவும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்னை பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கண்டித்துள்ளார். ஆனாலும் கல்லூரிக்கு செல்லும் வழியில் அந்த பெண்மணி மாணவியை பயமுறுத்தியுள்ளார்.

"உன் தாய் மீது ஆசிட் ஊற்றிவிடுவேன்". மாணவி மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் மாணவியின் தாயார் அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மூன்று நாட்கள் காவல்துறையினரின் உதவியுடன் பெண்ணை பாதுகாத்து வந்தார். ஆனால் அடுத்த நாள் மாணவி கல்லூரிக்கு செல்லும் வழியிலேயே அவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்மணி கடத்தி சென்றுள்ளார். தற்போது மாணவியின் தாயார்குளச்சல் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார்.