செல்போனில் பேசிக் கொண்டே ஆண் நோயாளி இடுப்பில் நறுக்..! செவிலியரால் நேரப் போகும் விபரீதம்! ஆற்காடு அதிர்ச்சி!

செல்போனில் உரையாடிக்கொண்டே செவிலியர் ஒருவர் ஊசிபோடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்காடு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கல்பனா என்ற செவிலியர் பணியாற்றி வருகிறார்‌. இவர் செல்போனில் உரையாடிக்கொண்டே ஊசி போட்ட புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் இளைஞர் ஒருவருக்கும், சீர்காழியில் பெண் ஒருவருக்கும் அலட்சியமாக போடப்பட்ட ஊசிகள் இடுப்பில் தங்கிய பிறகு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட செய்தி வைரலானது.

அலட்சிய போக்கை கடைபிடித்த சம்பந்தப்பட்ட செவிலியர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.