சாக்கு மூட்டையில் கிடந்த இளம் செவிலியரின் உடல்! கதறி பெற்றோர்! காதலன் செய்த விபரீத செயல்! அதிர்ச்சியில் போலீஸ்!

மர்மமான முறையில் இறந்த செவிலியரின் வழக்கில் குற்றவாளி தாமாகவே வந்து சரணடைந்திருக்கும் சம்பவமானது ஒரிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரிசா மாநிலத்தில் நிஹாரிகா பத்ரா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் அந்த மாநிலத்தில்  செவிலியராக பணியாற்றி வந்தார்.  இவர் 9-ஆம் தேதியன்று மாயமாகிவிட்டார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபரை காதலித்து வந்த சம்பவமானது தெரியவந்தது. உடனடியாக நிகாரிகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த புகாரில் அவர்கள் அவர் காதலன் ராஜாவுடன் என்று கூறியிருந்தனர். இதனால் காவல்துறையினர் எந்தவித அவசரமும் இன்று நிதானமாக செயல்பட்டு வந்திருந்தனர். இந்நிலையில் 17-ஆம் தேதியன்று நிகாரிகாவின் சடலமானது சாக்குப்பையில் கிடந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனை பார்த்து நர்சின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனடியாக அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பெண்ணின் ரத்தப்பரிசோதனை ரிப்போர்ட்டை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர். நிகாரிகா இறந்தபின்னர் அவருடைய காதலனான ராஜா தலைமறைவாகி விட்டார். இது காவல்துறையினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வழக்கின் திருப்புமுனையாக ராஜா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனால் இந்த வழக்கில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்த சம்பவமானது  ஒரிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.