மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி நுங்குக்கு உண்டு - பெண்களுக்கேற்றது வாழைப்பூ - ஜீரணத்துக்கும் நரம்புக்கும் சீரகம்

வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குவதில் பனை மரத்துக்கு தனித்தன்மை உண்டு. பதநீர் போன்று நுங்குவும் அதிக அளவில் மருத்துவ குணம் நிரம்பியதாகும்.


·         நுங்கில்  வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், புரத சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.  

·          கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை நுங்குக்கு உண்டு.

·         வயிற்றுப் பசியை  தூண்டுகிறது. மேலும். மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு இரண்டுக்குமே மருந்தாக செயல்புரிகிறது.. 

·         பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டி வருவதைத் தடுக்கவும் வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் தன்மையும் நுங்குக்கு உண்டு.

பெண்களுக்கேற்றது வாழைப்பூ, ஏன் தெரியுமா

இனிப்பு, காரம் போன்ற சுவைகளைப் போன்று இல்லாமல் துவர்ப்பு சுவை உடலுக்கு நன்மை செய்கிறது. இந்த சுவை நிரம்பிய வாழைப்பூவின் மகிமையைப் பார்க்கலாம்.

·         மாதவிலக்கு நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் வாழைப் பூவுக்கு உள்ளே  இருக்கும் வெண்மையான பகுதியை நசுக்கி சாறு எடுத்துக் குடித்தால் ரத்தப்போக்கு நிற்கும்.

·         வாழைப் பூவை ரசம் வைத்துக் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் சூடும் கட்டுப்படும்.

·         ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு சரிசெய்வதற்கும் வாழைப்பூ பயன்படுகிறது..

·         வாழைப்பூ குருத்தை பச்சையாக சாப்பிட்டால் உடல் சூடு,, வயிற்று வலி குறைந்துபோகும்.

ஜீரணத்துக்கும் நரம்புக்கும் நல்லது சீரகம்

குழம்பு, கூட்டு செய்யும்போது ஏதாவது ஒரு வகையில் சீரகத்தை சேர்த்துவிடுவது நம் தமிழர் பாரம்பரியம். இதன்பின்னே எளிதான ஜீரணம் எனப்படும் மாபெரும் மருத்துவ தத்துவம் ஒளிந்திருக்கிறது.

·         சிறிதளவு சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

·         நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். மோரில் சீரகப்பொடி போட்டு குடித்தால் மார்பு வலியும் வாயுத் தொல்லையும் நீங்கும்.

·         சீரகத்தை வறுத்து கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால்  நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

       உடம்புக்கு குளிர்ச்சியும், தேகத்துக்குப் பளபளப்பு தரும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.