நான் இருக்கேம்மா! சுபஸ்ரீ தாய் - தந்தையை நெகிழ வைத்த உதயநிதி!

சுபஸ்ரீ உயிரிழந்ததை அரசியலாக்க விரும்பவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


சில நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கரணை பகுதியில் பேணர் விழுந்து நிலை தடுமாறி கீழே விழுந்து லாரியில் அடிபட்டு பலியானார். இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். சுபஸ்ரீயின் உறவினர்களுக்கு தைரியம் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, " பேனர் கலாச்சாரத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திமுக எதிர்த்து வருகிறது. நான் இந்த மரணத்தை அரசியலாக்க விரும்பவில்லை. தற்போதும் பேணர்கள் அடிக்க மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் பதிவு செய்துள்ளோம். சுபஸ்ரீயை போன்று வேறொரு மரணம் நிகழக்கூடாது" என்று பேட்டியளித்தார்.

இந்த சந்திப்பானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.