ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியில்லை..! வாடிக்கையாளர்கள் வராததால் தவிக்கும் 3 லட்சம் விபச்சார பெண்கள்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

பேங்காங்: கொரோனா வைரஸ் பீதியால், தாய்லாந்து நாட்டில் 3 லட்சம் பாலியல் தொழிலாளிகள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.


உலகிலேயே, கேளிக்கைக்கு பிரபலமான நாடு தாய்லாந்து. இங்குள்ள பேங்காங், பட்டாயா உள்ளிட்ட நகரங்களில், பாலியல் தொழிலை நம்பி சுமார் 3 லட்சம் பெண்கள் வசிக்கின்றனர். இவர்களின் முழு நேர வேலையே பாலியல் தொழில்தான். சுற்றுலா பயணிகளுக்கு  மசாஜ் செய்துவிடுவதில் தொடங்கி, அவர்களுடன் விருப்பம்போல தாராளமாக செக்ஸ் செய்து, உணவு அளித்து உபசரிப்பது வரை தாய்லாந்தின் வருமானத்தில் பெருமளவு  சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளது.  

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால், சுற்றுலா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலாவையே நம்பியுள்ள தாய்லாந்து நாட்டில்  பேங்காங் முதல் பட்டாயா வரையுள்ள மசாஜ் விடுதிகள், நைட் கிளப்கள், விபசார விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வருகையும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  

இந்த திடீர் நடவடிக்கையால், வேலையிழந்த பாலியல் தொழிலாளிகள் பலர் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். எனினும், பலர் இன்னமும் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று  எதிர்பார்த்து காத்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சில பெண்கள், வேலை ஏதுமின்றி மதுவிடுதிகளில் உதவியாளர் வேலை செய்கின்றனர்.

''வாடிக்கையாளர் யாரேனும் விரும்பினால் அவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் தயார், ஏனெனில் கொரோனாவை விட பசி பிரச்னை முக்கியம்,'' என்று மதுவிடுதிகளில் பணிபுரியும் பெண்கள் குறிப்பிடுகின்றனர்.  எனினும், மது விடுதிகளுக்கு கொடுத்த அனுமதியை மற்ற மது விடுதிகள், மசாஜ் விடுதிகளுக்கும் கொடுத்தால் உதவிகரமாக இருக்கும் என்று பாலியல் தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர்.