உடல் முழுவதும் 100 டீ-சர்ட்! திருப்பூரை மிரட்டும் பனியன் கொள்ளையன்! மிரள வைக்கும் சம்பவம்!

100-க்கும் மேற்பட்ட டீஷர்ட்களை இளைஞரொருவர் பனியனில் வைத்துக்கொண்டு திருட முயன்ற சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனங்களில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் பணிக்கு சேர்ந்துள்ளார். குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக்கொண்டதால் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அவருடைய பின்னணி குறித்து சரிவர விசாரிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் அந்த ஊழியர் நிறுவனத்திற்குள் நுழையும்போது வழக்கம் போல மெல்லிய தேகத்துடன் இருந்துள்ளார். இரவு பணியை முடித்த பின்னர் வீடு திரும்பும்போது அவருடைய உடல் காற்றடைத்த பை போன்று உப்பியிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த சூப்பர்வைசர் மற்றும் காவலாளி அவரை சோதனைக்கு உட்படுத்தினர். அவருடைய ஆடைகளை கழுட்ட கூறியபோது அந்த இளைஞர் சற்று தயங்கியுள்ளார். வலுக்கட்டாயமாக அவருடைய ஆடைகளை கலைத்த பின்னர் பத்திற்கும் மேற்பட்ட டீ-ஷர்ட்டுகளை வெளியே எடுத்தனர்.

பின்னர் பாண்ட்டையும் பரிசோதித்தபோது, பண்டல் பண்டலாக கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட டீ-ஷர்ட்டுகளை வெளியே எடுத்துள்ளனர். பின்னர் அந்த வடமாநில இளைஞரை சரமாரியாக அடித்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பினர். சம்பளம் குறைவாக கொடுக்கலாம் என்ற காரணத்திற்காக சம்பந்தப்பட்ட நபரை விசாரிக்காமல் பணியில் சேர்ப்பதால் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.