கழுத்தில் நகக்கீறல்..! மார்பகத்திலும் காயம்! ராயல் என்ஃபீல்டு நிறுவன பெண்ணுக்கு பட்டப்பகலில் ஏற்பட்ட பயங்கரம்!

வீட்டில் தனியாக வசித்து வந்த வட மாநில பெண்ணை மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்த சம்பவமானது படப்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கர்ணா பிரியதர்ஷினி. இவருடைய வயது 20. இவருடைய தேவியின் பெயர் ரஞ்சிதா குமாரி.  ரஞ்சிதா குமாரியின் வயது 22. 2 பேரும் ஒரகடத்தில் உள்ள பிரபல இஞ்சின் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். ரஞ்சிதா குமாரி காலை ஷிப்ட் பணியில் ஈடுபட்டு வந்தார். பிரியதர்ஷினி இரவு நேரத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம் போல ரஞ்சிதா குமாரி காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் பிரியதர்ஷினி தனியாக வசித்து வந்தார். ரஞ்சிதாவுக்கு மாதிரி வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிரியதர்ஷினி சடலமாக இறந்து கிடந்தார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரியதர்ஷினியின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியதர்ஷினியின் உடலில் நகக்கீறல்கள், ரத்த காயங்கள் இருந்துள்ளன. அதன் மூலம் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.  பிரியதர்ஷினியை யாரு கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கக்கூடும் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது படப்பையில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.