நள்ளிரவு! நடு வீடு! ஓய்வு பெற்ற நீதிபதியால் மருமகளுக்கு நேர்ந்த விபரீதம்! வைரல் சிசிடிவி!

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நூட்டி ராமமோகன ராவ் நள்ளிரவு நேரத்தில் தனது மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து மருமகளை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


த நியுஸ் மினியுட் எனும் ஆங்கில செய்தி இணையதளம் ஒரு செய்தி மற்றும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது. அதில் நள்ளிரவு நேரத்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதே போல் வயதான ஒரு நபர் அந்த இளம் பெண்ணை கைகளை முறுக்கி சோபாவில் அமர வைத்து ஏதோ கத்துவது போல் தெரிகிறது.

இதே போல் மற்றும் ஒரு முதிய பெண்மணியும் அவர்களுடன் இணைந்து அந்த இளம் பெண்ணை தாக்குவது காட்சியாக விரிகிறது. அத்துடன் அவ்வப்போது அந்த இளைஞர் அந்த இளம் பெண்ணை தாக்குவதும் ஒரு கட்டத்தில் அந்த முதிய நபர் அந்த இளம் பெண்ணை சோபாவில் இருந்து கிழே தரையில் தள்ளுவதும் உள்ளது. 

இந்த களேபரங்களுக்கு மத்தியில் அந்த இளம் பெண்ணின் பச்சிளம் குழந்தை ஓடி வந்து அவரது கால்களை பற்றிக் கொள்வதும் அதனை பொருட்படுத்தாமல் அந்த முதிய நபர் அந்த இளம் பெண்ணை மூர்க்கத்தனமாக பிடித்து தள்ளுவதும் உள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் நூட்டி ராமமோகன் ராவின் ஐதராபாத் இல்லத்தில் பதிவானது.

கடந்த ஏப்ரல் 20ந் தேதி இரவு 11 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள ராமமோகன ராவின் இல்லத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட இளம் பெண் அவரது மருமகள் சிந்து. தாக்கிய இளைஞர் சிந்துவின் கணவர் மற்றும் ராமமோகன ராவின் மகன். ஆவார் அதாவது ராமமோகன ராவ், அவரது மனைவி மற்றும் மகன் என மூன்று பேரும் இணைந்து சிந்துவை தாக்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய சிந்து, தன்னிடம் வரதட்சனை கேட்டு இவ்வாறு தனது கணவன் வீட்டார் நடந்து கொள்வதாகவும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் தற்போது சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார்.