திருப்பதி தேவஸ்தானத்தில் பண்யாற்றும் இந்துக்கள் அல்லாதோர் பணியிலிருந்து விலக உத்தரவு!.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகிறார்கள்.


இதில் பணியாற்ற இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லை.கடை நிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,கண்காணிப்பாளர்கள் அனைவரும் இந்துக்களாகவே இருப்பர்.ஏழுமலையானை தரிசிக்க வி.ஐ.பிகள் வரும்போது இவர்களும் உடன் செல்லவேண்டி இருப்பதால் இந்த ஏற்பாடு.

சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான பஸ் டிக்கெட்டின் பின்புறம் ஹஜ் யாத்திரை மற்றும் ஜெருசலேம் பயண விளம்பரங்கள் வந்ததை தொடர்ந்து ஊழியர்கள் தீவிரமாக கண்காணிக்க பட்டனர்.இதில் இந்துக்கள் அல்லாத 46 பேர் தேவஸ்தானத்தில் பணியாற்றுவது தெரிய வந்தது. இவர்களில் பெரும் பகுதியினர் தேவஸ்தான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள்.

சிலர் தேவஸ்தான அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். இவர்கள் பணியில் சேர்ந்த பிறகே மதம் மாறி இருப்பதும் அந்த ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் அறிவுறுத்தியும் அவர்கள் தங்களது புதிய மதத்தைக் கைவிட மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

இந்த பிரட்சினையை எப்படி சமாளிப்பது என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்க்கொண்டு இருந்த சமையத்தில் ஆந்திர மாநில முதனைமைச் செயலாளர் எல்.வி சுப்பிரமணியம் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்தார்.ஊழியர்கள் இந்த விஷயத்தை அவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.

இதுகுறித்த விபரங்களை அறிந்து கொண்ட எல்.வி சுப்பிரமணியம்' மதம் மாறுவதை நாங்கள் குறை கூறவில்லை.ஆனால்,இந்துக்களின் மிகப்பெரிய திருத்தலமான திருபதியில் மாற்று மதத்தினர் பணிபுரிவதை இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். இங்கு பணியாற்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தயவு செய்து ராஜினாமா செய்து விடுங்கள்.

நீங்கள் இந்துக்கள்தான் என்று எங்களை நம்ப வைக்க முயற்சித்தால் நாங்கள் அடிக்கடி உங்கள் வீடுகளை சோதனை இடவேண்டி இருக்கும்.உங்களை இரவும் பகலும் கண்காணிக்க வேண்டி வரும்.என்று கூறி இருக்கிறார். இவரது வாய்மொழி உத்தரவை ஏற்று, மாற்றுமத ஊழியர்கள் அவர்களாகவே பணியை விட்டு விலகுவார்களா இல்லை நீதிமன்றத்தின் உதவியை நாடுவார்களா என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.