ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.... எடப்பாடியார் கிண்டல்

பொய் பேசுவதில் இந்த உலகிலேயே சிறந்தவர் ஸ்டாலின். அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று அவர் பேசியபோது, ‘ஸ்டாலினுக்கு சிந்தித்துப் பேசவே தெரியாது. தமிழகமே பாராட்டும் பல திட்டங்களை ஸ்டாலின் தவறாக விமர்சனம் செய்கிறார். அம்மா மினி கிளினிக் போன்ற நல்ல திட்டங்களையும் அவர் மதிக்கவில்லை.

தமிழகம் பல துறைகளிலும் சிறந்து வழங்கும்போது ஸ்டாலின் மட்டும் தமிழகம் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டி பொய் பேசி வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், அதை ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம் என்று கிண்டல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.