தென் ஆப்பிரிக்கா பவுலர்களில் No.1 இவர் தான் !

தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 422 விக்கெட்களை கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பாகர் ஜமானை அவுட் செய்ததன் மூலமாக 422 விக்கெட்களை கைப்பற்றி ஷான் பொல்லாக்கின் சாதனை முறியடித்துள்ளார்.

ஷான் பொல்லாக் 108 டெஸ்ட் போட்டிகளில் 421 விக்கெட்களை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. டேல் ஸ்டெய்ன் 89 டெஸ்ட் போட்டிகளிலேயே 422 விக்கெட்களை கைப்பற்றி இந்த சாதனையை  படைத்துள்ளார்.