ஏசி, பிரிட்ஜ் வச்சிருக்கீங்களா? உங்க ரேசன் கார்டுக்கு ஆப்பு ரெடி! வருகிறது புதிய சட்டம்!

ஏசி உட்பட அரசு வெளியிட்டுள்ள 10 பொருட்களில் ஏதேனும் 1 இருந்தாலும் சலுகைக்கான முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ள குடும்ப அட்டை பறிக்கப்படும் என்ற செய்தியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தமிழகத்தில் குடும்ப அட்டையை வசதியானவர்கள் முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர் வரை உபயோகிக்கின்றனர். பல்வேறு பண்டிகைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் பொருட்களில் சில பணக்காரர்கள் ஏழைகளுக்கு பதிலாக பெற்று கொள்கின்றனர். மேலும் இத்தகைய மானியங்களை வாங்குவதற்காகவே பல நபர்கள் போலி குடும்ப அட்டைகளை தயாரித்து வருகின்றனர். 

இதனை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த அனுபவமிக்கவர்களை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு, எந்தெந்த குடும்ப அட்டைகள் மாணியங்களை பெறுவதற்கு தகுதியானவை என்பதற்கு  அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கீழ் உள்ள 10 பொருட்களில் ஏதேனும் ஒன்று வைத்திருந்தாலும் அவர்களால் இனி மானியத்தை பெற இயலாது என்று கூறியுள்ளனர்.

1) மூன்று அல்லது மூன்றுக்கு மேல் அறைகள் கொண்ட கான்க்ரீட் வீடுகள்.

2) குளிர்சாதனப்பெட்டி

3) 5 ஏக்கர்கள் மேல் சொந்த நிலம் கொண்ட விவசாய குடும்பத்தினர்.

4) மத்திய மற்றும் மாநில உள்ளாட்சி துறையில் பணியாற்றி வரும் குடும்பங்கள். 

5) 4 சக்கர வாகனங்களை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துள்ளவர்கள்.

6) ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேலுள்ள குடும்பங்கள்.

7) வணிக நிறுவனங்களை பதிவு செய்துள்ள குடும்பங்கள்.

8) தொழில் வரி செலுத்துவோரை உறுப்பினராகக் கொண்ட குடும்பம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்றிருந்தாலும் அவர்களால் இனி அரசு மானியத்தை அனுபவிக்க இயலாது. மேற்கூறியவர்கள் இதுவரை மானியத்தைப் பெற்று வந்தாலும் அந்த நிலையை இவர்களால் தொடர இயலாது.

இந்த அறிவிப்பானது தமிழகத்தின் பல்வேறு குடும்பங்களில் வைரலாக பரவி வருகிறது.