தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வேறு இலாகா வழங்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை கிடையாது! புதிய இலாகா வழங்க மோடி முடிவு!

பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நிர்மலா சீதாராமன் துவக்கத்தில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். அதன் பிறகு நாட்டின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான பிரச்சனையின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை நிர்மலா சீதாராமன் முறியடித்தார்.
நிர்மலா சீதாராமன் செயல்பாடுகளை பிரதமர் மோடி நேரடியாக பாராட்டினார். ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பான புகார்களுக்கு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன் அளித்த பதிலை பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனைவரும் தங்கள் கூட்ட பக்கத்தில் பகிர்ந்தனர். அந்த அளவிற்கு மெச்சத் தகுந்த வகையில் நிர்மலா சீத்தாராமன் செயல்பட்டார்.
ஆனால் தற்போது மோடியின் புதிய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார். இதனால் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு துறையை கவனித்து வரும் நிர்மலா சீதாராமன் வேறு சிறைக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஸ்மா சுவராஜ் உடல்நிலை காரணமாக அந்த பதவியில் தொடர விரும்பவில்லை. எனவே அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதனால் காலியாகும் வெளியுறவுத்துறையை நிர்மலா சீதாராமன் மோடி ஒப்படைப்பார் எனக் கருதப்படுகிறது. அதேசமயம் அமைதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்பதால் அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி ஸ்மிருதி இரானி வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் நிர்மலா சீதாராமனுக்கு வேறு இலாகா ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும்.