நித்யானந்தாவின் ஆஸ்தான சிஷ்யை திடீர் மாயம்..! பெற்றோர் பகீர் புகார்..! சற்று முன் வெளியான பரபர வீடியோ!

நித்தியானந்தாவின் சிஷ்யை கடத்தப்பட்டதாக வெளியான சம்பவத்தில் பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


நித்யானந்தாவின் சிஷ்யர்களில் 19 வயதான மா நித்யானந்தா என்ற இளம் பெண்ணும் ஒருவராவார். ஆண்டாள் குறித்து வைரமுத்து இழிவாக பேசப்பட்ட சம்பவத்தில், வைரமுத்துவை மா நித்யானந்தா கடுமையாக சாடினார். இந்த வீடியோவானது அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

சமீபத்தில் மா நித்யானந்தா கடத்தப்பட்டு விட்டதாக செய்தி ஒன்று வைரலானது.  அவர் கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவரை காணவில்லை எனவும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து திடீர் திருப்பம் போன்று, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், "என்னை யாரும் கடத்தவில்லை. என் இஷ்டம் போன்று பல இடங்களுக்கு சென்று வருகிறேன். நான் விரும்பியே வேறு ஒரு இடத்திற்கு வந்துள்ளேன். என்னை மனரீதியாக காயப்படுத்துவது இருக்கு என் பெற்றோர் எதைவேண்டுமானாலும் செய்வர். அவர்களே நான் கடத்தப்பட்டு இருப்பதாக கூறியிருப்பது என்னை பெரிதும் பாதித்துள்ளது.

கடத்தப்பட்டதாக கூறி என்னுடைய மன அழுத்தத்தை அவர்கள் அதிகரிக்கின்றனர். நித்யானந்தா ஆசிரமத்தினால் எனக்கு எந்த தொல்லையும் கிடையாது" என்று கூறியிருந்தார்.

வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.