டானிக்கெல்லாம் வேண்டாம்..பச்சைப்பயிறு எடுத்துகிட்டாலே போதும்!!எப்படியென்பது இந்த செய்தியில் உள்ளது!!

பருப்பு வகைகளில் நிறையவே புரதச்சத்து இருக்கிறது என்றாலும் பச்சைப்பயிறில் கூடுதலாக இரும்புச்சத்தும் இருக்கிறது. அதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சத்து டானிக் போன்று செயலாற்றுகிறது பச்சைப்பயிறு.


பச்சைப்பயிறை முளைக்கவைத்து சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். 

• கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பவர்கள் தினமும் பச்சைப்பயிறு எடுத்துக்கொண்டால், கொழுப்பின் அளவு கட்டுப்படும்.

• அதிகம் வெயிலில் அலைபவர்கள் தினமும் பச்சைப்பயிறு மாவு அரைத்து தேய்த்துக் குளித்தால் பளீச் நிறம் பெறமுடியும்.

• நீண்ட நேரம் பசியில்லாமல் வயிறை வைத்துக்கொள்ளும் தன்மை பச்சைப்பயிறுக்கு உள்ளது என்பதால் உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது.

• போதிய இரும்புச்சத்து இருப்பதால், ரத்த சோகை நோயில் இருந்து தப்பிக்க முடியும்.

சருமப் பொலிவு மட்டுமின்றி தலைமுடி வளர்ச்சிக்கும் துணை புரிகிறது பச்சைப்பயிறு. உடல் சூட்டை தணிக்கும் தன்மையும் பச்சைப் பயிறுக்கு உண்டு.