எப்போதும் செய்தியாளர்களை சந்தித்து உற்சாகமாகவும் மிக்கதாகவும் பேசும் பிரேமலதா இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கலங்கிய நிலையில் இருந்தார்.
நோ மேக்கப்! வாடிய முகம்! பிரஸ் மீட்டில் கலங்கிய பிரேமலதா! காரணம் இது தான்!
சுமார் 6 கோடி ரூபாய் கடனுக்காக விஜயகாந்தின் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று காலை அதிரடியாக அறிவித்தது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும் தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய விஜயகாந்த் இந்த நிலைமை என்று அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பும் நிலைக்கு ஆளானார்.
நடிகர் சங்க கடனை அடைத்து மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்ற விஜயகாந்த் தனது வீட்டின் கடன் பிரச்சனை இப்படி வீதிக்கு வரும் அளவிற்கு வைத்திருப்பார் என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் விஜயகாந்த் பழைய உடல்நிலையில் இல்லாத நிலையில் அவரது கணக்கு வழக்குகளை பிரேமலதாவும் அவரது சகோதரர் எல் கே சுதிசும் பார்த்து வந்தனர்.
இதனால் செய்தியாளர்களை சந்தித்த கடன் விவகாரம் குறித்து விளக்கமளிக்க இருவரும் முடிவு செய்தனர். இதற்காக பிற்பகலில் பிரேமலதா விஜயகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் வழக்கமான மேக்கப்பில் இல்லை. முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டிருந்தது. தலை கூட ஒழுங்காக வாராமல் காட்சி தந்தார் பிரேமலதா. வழக்கமாக செய்தியாளர் சந்திப்பு என்றால் முழு மேக்கப்பில் உற்சாகமாக வந்து நிற்பவர் அவர்.
ஆனால் இன்று செய்து அவர்களை சந்திக்கும் போது அவருடைய குரல் உள் வாங்கியிருந்தது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கணீர் கணீர் என்ற பதிலளிக்கக்கூடிய பிரேமலதா இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அனைத்து கேள்விகளுக்கும் பம்மிய நிலையிலேயே பதிலளித்தார். இதற்கு காரணம் ஐஓபி வெளியிட்ட சொத்துக்கள் ஏல அறிவிப்பு தான் என்கிறார்கள்.
ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஐஓபி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கல்லூரியின் பெயரை முழுவதுமாக கிடைத்துவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இத்தனை காலமாக விஜயகாந்த் சம்பாதித்து வைத்திருந்த கௌரவம் நொடிப்பொழுதில் காணாமல் போய்விட்டது.
இதற்கெல்லாம் தனது அலட்சியமும் தன்னுடைய நிர்வாகத்திறமை இன்மையால்தான் காரணம் என்று உணர்ந்தேன் பிரேமலதா இப்படி செய்தியாளர்களை கலங்கிய நிலையில் சந்தித்து இருக்கலாம் என்கிறார்கள்.