வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மின் கட்டணம் இலவசம்! அதிரடியாக அறிவித்த மாநில அரசு!

200 யூனிட்களுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால் வாடகை வீட்டுக்காரர்கள் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


அரசியல்வாதிகள் எப்போதும் தேர்தல் நேரம் நெருங்கும்போது இலவசங்களை வாரி இறைப்பதை வழக்கமாக கொண்டவர்கள். பிற்காலத்தில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.

அடுத்த ஆண்டில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களாகவே கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு அறிவிப்பின் மூலம் டெல்லி மக்களை கவர்ந்துள்ளார்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் 200 யூனிட் வரை மின்சாரத்தை உபயோகித்தால் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதாகும். இந்த அறிவிப்பை அவர் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "200 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தினால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அதைவிட அதிகமாக உபயோகித்தால் முழுவதற்கும் பணத்தை செலுத்த வேண்டும். பழைய மீட்டர்களை ஒப்படைத்துவிட்டு, 3,000 ரூபாய் கொடுத்து புதிய மீட்டர்களை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

ஆட்சிக்கு வந்த முதலிலே 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 50% மானியம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டதும் மக்களுக்கு பெரிதும் உபயோகமாக அமைந்தது.

இது போன்ற அறிவிப்புகளால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும்அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து இதுபோன்ற அறிவிப்புகளை அறிவித்து வருவது அரசியல்வாதிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.