உங்களுடன் கூட்டணி இல்லை! கேட்டை ஆட்ட வேண்டாம்! கேப்டனுக்கு டிடிவியின் ஷாக் ட்ரீட்மென்ட்!

தேமுதிக கூட்டணியில் எண்ணமில்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி


பேரறிவாளன் உள்பட 7 பேரை சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அரசும் தீர்மானம் போட்டு அனுப்பி உள்ளது. கவர்னர் ஏன் கையெழுத்து போடாமல் தாமதம் செய்கிறார் எம்று தெரியவில்லை. தாமதத்தை தட்டி கேட்கும் துணிச்சல் அதிமுக அரசுக்கு இல்லை. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித சங்கிலி போராட்டத்தில் அமமுக கலந்து கொள்கின்றது. நான்கரை ஆண்டுகளுக்கு பின் பிரதமர் மோடிக்கு எம்.ஜி.ஆர். நினைவு வந்து பெயரை வைத்ததிற்கு வாழ்த்துக்கள். ஊடகத்தில் இருப்பவர்கள் வேகமாக தான் கேள்வி கேட்பார்கள். நாம் தான் பொறுமையாக பதிலளிக்க வேண்டும். ஒருமையில் பிரேமலதா பேசியது தவறு.

கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன்  மாறி மாறி பேசினால் கிண்டல் செய்ய தான் செய்வார்கள். ஒரு நிலைப்பாட்டுடன் கூட்டணியை தேமுதிக அமைக்க வேண்டும். அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. நடிகர் கமலஹாசன் அமமுகவுடன் கூட்டணிக்கு வருவது பற்றி தெரியவில்லை. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் நிலையில் அமமுக இல்லை.

ஜெயலலிதா வை கிண்டல் செய்து விமர்சனம் செய்தவர்கள் தேமுதிக., பா.ம.க. இந்த 2 கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் அமமுக தான் முதல் அணி. யார்  தேர்தல் முடிவுகளுக்கு பின் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.