கொரோனா கிருமியை தனது உடலுக்குள் தானே செலுத்திக் கொண்ட நிவாரண் 90 மேனேஜர்..? மருந்து கண்டுபிடிக்க விபரீதம்!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அந்த வைரஸை தனது உடலுக்குள் தானே நிவாரண் 90 நிறுவன மேலாளர் செலுத்திக் கொண்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


சென்னையை சேர்ந்த சிவனேசன் என்பவர்  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நிவாரன் 90 மருந்து தாயாரிக்கும் நிறுவனத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். ’ஊரடங்கால் சென்னை திரும்பிய சிவநேதன் கோடம்பாக்கத்தில் உள்ள நிவாரண் 90 நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தியாகராய நகரில் உள்ள உரிமையாளர் ராஜ்குமார் வீட்டில்  மருந்து கண்டு பிடிக்க நடைபெற்ற முயற்சியின் போது ரசாயானத்தை குடித்ததால் சிவநேசன் உயிரிழந்தார். அவருடன் பரிசோதனை செய்து கொண்ட டாக்டர் ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேதப்பரிசோதனை அறிக்கையில் சிவநேசன் கொரோனா தொற்றுடன் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு கொரோனா ஏற்பட்டதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்க நிவாரண் 90 உரிமையாளர் ராஜ்குமாருடன் இணைந்து செயல்பட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் கொரோனா நோய் கிருமியை சிவநேசன் தனது உடலுக்குள் செலுத்தி சோதனை முயற்சி செய்த போது மருத்து கரைசலை குடித்ததால் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.