நித்யானந்தா உருவாகியிருக்கும் புதிய கைலாச நாட்டிற்கு பிரதமராக தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரஞ்சிதா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நித்தி உருவாக்கிய நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா நியமனம்? சற்று முன் வெளியான தகவல்!

சமீப காலமாகவே நித்யானந்தாவின் மீதும் அவரது ஆசிரமத்தின் மீதும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நித்தியானந்தா தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் ஈக்வடார் பகுதி அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
மேலும் அந்த தீவிற்கு "கைலாச நாடு" என்று நித்யானந்தா பெயரிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் நித்யானந்தா உருவாக்கியிருக்கும் இந்த புதிய நாட்டிற்கு கொடி , சின்னம் , மொழி ஆகிய அனைத்தும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கைலாச நாட்டிற்கு பிரதமராக நித்யானந்தா நியமிக்கப்படுவார் என்றும் மேலும் அவருக்கு கீழ் 10 துறைகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் மற்றும் நித்யானந்தாவின் சீடர்கள் அம்மா என்று அழைக்கப்படும் தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான ரஞ்சிதா அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
மேலும் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் நித்யானந்தாவின் தீவிர பக்தர்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கைலாச நாட்டில் குடிமகன்களாக இருக்க வேண்டும் என்பது நித்யானந்தாவின் கட்டளையாகும்.
அகமதாபாத்தைச் சேர்ந்த மூன்று மிகப்பெரிய தொழிலதிபர்களின் பணத்தை கொண்டுதான் நித்யானந்தா இந்த கைலாச நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது மட்டுமில்லாமல் நித்யானந்தா தனது ஆசிரமத்திற்கு வரும் பணத்தை வைத்துக் கொண்டு இந்து ரிசர்வ் வங்கி எனும் புதிய வங்கியை துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நித்யானந்தா உருவாக்கியிருக்கும் இந்த புதிய கைலாச நாட்டை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இதற்கான கோரிக்கை இடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் இருந்து கொண்டு வேறு ஒரு நாட்டிற்கு தனிநாடு கோரிக்கை வைப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கையும் எடுக்கலாம் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை வைத்துப் பார்க்கும்போது நித்யானந்தா மீது தேசத்துரோக வழக்கு போடுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.