6 மாவட்டங்களில் டீசலுக்கு அதிரடி தடை! பெட்ரோல் பங்குகளில் விற்கப்படாது! ஏன் தெரியுமா?

நாக்பூர்: மகாராஷ்டிராவில் 6 மாவட்டங்களில் டீசல் பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி காட்டியுள்ளார்.


நிதின் கட்கரி தற்போது சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை உள்ளிட்டவற்றை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வாகன பயன்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் டீசல் பயன்படுத்தக்கூடாது என்ற புதிய உத்தரவை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அதாவது, நாக்பூர், பந்த்ரா, கோண்டியா, சந்திரபூர், கச்சிரோலி, வர்தா ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு துளி டீசல் கூட பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, டிரக், பேருந்து போன்றவற்றுக்கு, பயோ-சிஎன்ஜி எரிபொருள்தான் பயன்படுத்த வேண்டும் எனவும், இது கடினமான முயற்சியாக இருந்தாலும் படிப்படியாக வெற்றிகரமாக்குவோம் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

இதன்படி, 2024ம் ஆண்டு வரை இந்த 6 மாவட்டங்களில் டீசல் இன்றி, பயோ எரிபொருள் பயன்படுத்தியே வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. ஏற்கனவே, 50 பேருந்துகள் சோதனை முறையில் இத்தகைய உயிரி எரிபொருளில் இங்கே இயக்கப்பட்டு வருகின்றன, என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் சுற்றுச் சூழல் பாதிப்பு குறையும்.

இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் பிறகு மராட்டிய மாநிலம் முழுவதும் டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு நாடு முழுவதும் டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இயற்கை எரிபொருள் விற்பனை ஊக்கப்படுத்தப்படுமாம்.