எம்பி தேர்தலில் பிரபல தேசிய கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள பிரபல நடிகை!

எம்பி தேர்தலில் பிரபல நடிகை ஒருவர் பிரபல தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களுரு ரூரல் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி பாஜக சார்பில் பெங்களூரு ரூரல் தொகுதியில் நிஷா யோகேஷ்வர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பிரபல கன்னட நடிகை ஆவார்.

நிஷாவின் குடும்பமே பாஜகவில் நிர்வாகிகளாக உள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் வலுவான காங்கிரஸ் வேட்பாளரை நிஷா போன்ற பிரபல நடிகையால் தான் எதிர்க்க முடியும் என்று பாஜக மேலிடம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாம்.

நிஷா விரைவில் பிரச்சாரத்தை துவங்க உள்ளாராம். அப்போது அவரை காண ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் தற்போதே போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம்.