டிடிஎஸ் பிடித்தத்தில் 25 சதவீதம் இனி கிடையாது..! டேக் ஹோம் சேலரி உயரப்போகுது! எல்லாம் மோடி செயல்!

டிடிஎஸ் பிடித்தத்தில் வரி விகிதம் 25% குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடியாக அறிவித்துள்ளார்.


தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து நடந்துவரும் லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்று இருந்தார். அந்த உரையில் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்த நிதியிலிருந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்து விவரங்களை இன்று மாலை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பின்படி டிடிஎஸ் பிடித்தத்தில் வரி விகிதம் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது எனவும் இது நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த டிடிஎஸ் வரி விதிப்பு குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதன் மூலம் டேக் ஹோம் சேலரி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.