பள பள கூந்தல்! மணக்கும் மல்லிகைப்பூ நிர்மலா தேவி மொட்டைத் தலையான பரிதாபம்! என்ன நடக்கிறது அவர் வாழ்க்கையில்?

நீதிமன்றத்திற்கு நிர்மலாதேவி மொட்டையடித்து வந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்ற ஆண்டு நிர்மலா தேவி தமிழகத்தில் தவறான விஷயங்களுக்காக டிரெண்டிங்காக இருந்தவர். கல்லூரி மாணவிகளை சமூகத்தில் இருந்த செல்வாக்கு மிக்க நபர்களுக்கு இரையாக்கினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் விடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆளுநர் முதல் அமைச்சர் வரை சிக்கினர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியாயின. யாரும் எதிர்பாராவிதமாக இவர் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிர்மலாதேவி வெளியான சில நாட்களிலேயே அருப்புக்கோட்டை பகுதியில் தலைவிரி கோலத்தில் அலைந்துள்ளார்.

முதலில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நிர்மலா தேவி, பின்னர் அப்பகுதியில் அமைந்துள்ள தர்கா ஒன்றிற்கு சென்றார். அங்கு குழந்தைகளை மந்திரிக்கும் இடத்தில் சென்று தனக்குத்தானே புலம்பி கொண்டிருந்தார். அப்பகுதி காவல்துறையினர் விரைந்து வந்து அவரை தர்காவில் இருந்து வெளியேற்றினார்கள்.

நிர்மலாதேவி நடந்து கொண்ட விதம் பொதுமக்களுக்கு வினோதமாக அமைந்திருந்தது. அதற்கேற்றவாறு மறுநாளே தனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக தன் வழக்கறிஞரிடம் அவர் தெரிவித்திருந்தார். அன்று நடத்தப்படாமல் இந்த வழக்கின் தேதியை நீதிபதி மாற்றியிருந்தார். 

அன்றும் நீதிமன்றத்திற்கு நிர்மலாதேவி வருகை தரவில்லை. நிர்மலாதேவி அப்போது மனநலம் பாதிக்கப்பட்டதற்கு உளவியல் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.மாற்று தேதியிலும் அவர் ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.

நிர்மலா தேவியை பரிசோதித்த உளவியல் மருத்துவர் நோய் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு சிறிய அளவில் மன நோய் ஏற்பட்டுள்ளதாகவும். 4-5 முறை சிகிச்சை பெற்றால் இந்த நோயிலிருந்து அவரால் விடுபட இயலும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கானது இன்று மீண்டும் நீதிமன்றத்தில் எழுந்தது. நிர்மலாதேவி நீதிமன்றத்திற்கு எவ்வாறு வருவாரென்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர் மொட்டை அடித்து வந்ததைக கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சிறையிலிருந்து வெளியே வந்தால் மொட்டையடித்து கொள்வதாக அவர் பிரார்த்தித்ததாக கூறப்படுகிறது. எனினும் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள நிர்மலாதேவியிடம் நிறைய மனநிலை மாற்றங்கள் காணப்படுவது அனைவரும் அறிந்ததே.