ஜெயலலிதா அறிமுகம் செய்த நிலவேம்பு கஷாயம்… எடப்பாடியார் அறிமுகம் செய்த கபசுரக்குடிநீர்… - முதல்வருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பாராட்டு.

கொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புகழ்மாலை சூட்டினார்.


‘’மறைந்த முதல்வர் ஜெயலலிதா டெங்கு பரவிய காலத்தில் நிலவேம்பு கசாயத்தை அறிமுகப்படுத்தும் அரசாணையை வெளியிட்டார். தற்போதைய முதல்வரும் கபசுரக் குடிநீரை பயன்படுத்தும் அரசாணையை கொண்டு வந்தார். தமிழகத்தில் மட்டும் தான் பாரம்பரிய மருந்து குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 மக்களிடம் பாரம்பரிய மருத்துகளை கொண்டு சென்று, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 2000 பேர் அதிகம் இறந்திருப்பார்கள். தடுப்பு மருந்து வந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் அதிகம் பேர் கூடாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடித்தால் அடுத்த அலை வராமல் நம்மால் தடுக்க முடியும். பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.