மருமகனுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை வெளியிட்ட அடுத்த வீடியோ..! இந்த முறை அந்த மாதிரி இல்லை!

பிரபல மலையாள திரையுலக நடிகை தாரா கல்யாண் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிளாசிக்கல் டான்சரான தாரா கல்யாண் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி உள்ளிட்ட பல நடனங்களில் அசத்துபவர். மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் தாரா தற்போது மகள் சௌபாக்கியாவிற்கு திருமணம் செய்து வைத்தார். திருமண புகைப்படங்களை அவதுறாக சித்தரித்த சில மர்மநபர்கள் தாரா கல்யாணுக்கு அவரது மருமகனுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக வைரலாக்கிவிட்டனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை தாரா கல்யாண் தன்னுடைய மனவேதனையை வெளிப்படுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதை பார்ப்பவர்களின் மனம் கலங்கிப் போய் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த மலையாளம், கன்னடம் சினிமா மற்றும் டிவி நடிகர்கள் தாரா கல்யாக்கு ஆறுதல் கூறினர். இதுபோன்ற மட்டமான செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது அந்த மனஉளைச்சலில் இருந்து வெளியில் வந்துள்ள தாரா கல்யாண் மீண்டும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். டிக்டாக்கில் ஒவ்வொரு பாடல்களுக்கும் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

தாரா கல்யாணின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே டான்ஸரான தாரா கல்யாண் இந்த வயதிலும், நளினமாக நடனமாடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்நதுள்ளது.