வாரத்தில் இரண்டு நாட்கள் மஜா! மி டூ புகாரில் சிக்குகிறார் கொங்கு அமைச்சர்..?

அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்ந்து மீண்டும் ஒரு கொங்கு அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதற்கு தினகரன் அணி தயாராக இருப்பதாக செய்தி பரபரக்கிறது. தேர்தலுக்குள் ஒட்டுமொத்த அமைச்சர்கள் மீதும் ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருக்கவேண்டும் என்பதுதான் அ.ம.மு.க. திட்டமாம்.


அமைச்சர் ஜெயக்குமார் மீது சிந்து கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் அக்கப்போரில் காணாமல் போய்விட்டது. இதனால் அப்செட் ஆன டி.டி.வி.தினகரன் குரூப் அடுத்த அஸ்திரம் வீசுவதற்கு நல்ல நேரம் பார்த்து வருகிறார்களாம்.

இப்போது சிக்கியிருப்பவர் கொங்கு பகுதியைச் சேர்ந்த அமைச்சர். 

வாரத்தில் இரண்டு நாட்கள் மஜாவாக இருப்பது அமைச்சரின் வழக்கமாம். இதற்காக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளில் ஸ்பெஷல் ரிசார்ட் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாராம். அமைச்சருக்கு இடதும் வலதுமாக இருந்த அடிமைப் புள்ளி தினகரனின் ஆள்.அதனால் அவ்வப்போது நடக்கும் சமாச்சாரங்களை பாஸ் செய்து வந்தாராம். அமைச்சர் குறித்த வீடியோ ஆதாரங்களும் பக்காவாக இருக்கின்றனவாம்.

ஆனால், அமைச்சரான காலம் முதல்  மாதாமாதம் கறாராக இதுவரை குக்கருக்கு  கப்பம் கட்டி வந்தாராம். அதனால் அந்த் அமைச்சரை மட்டும் திட்டாமல் இருந்தனர். அவரை தங்கள் ஸ்லீப்பர் செல் என்று கருதினார்கள்.

ஆனால்,  சமீபத்தில் குக்கரின் நிலை சின்னாபின்னமாகி வருவதால், கடந்த மாதம் முதல் கப்பம் கட்டுவதை அமைச்சர் நிறுத்திவிட்டாராம்.  இதனால் ஆத்திரம் அடைந்திருக்கும் கும்பல், வீடியோ ரிலீஸ் செய்வோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனை எப்படி சமாளிப்பது என்று மைக் டைசனிடம் ஆலோசனை கேட்டு, இப்போது தெம்பாக இருக்கிறாராம் அமைச்சர்.

முடிந்தால் ரிலீஸ் செய்துகொள் எனக்கு பப்ளிசிட்டிதான். எந்தப் பெண்ணும் நேரடியாக வந்து புகார் கொடுக்க மாட்டார் என்று சவால் விட்டிருக்கிறார்.

அதனால் சுபமுகூர்த்த தினத்தில் அமைச்சரின் ஆபாச சி.டி. அல்லது மி டூ புகார் வெளியே வரலாம்!