ரஜினி தான் நம்பர் 1! விஜய் இல்லை! சீமான் அந்தர் பல்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து விலகினால் அந்த இடத்தை நடிகர் விஜய்யால் தான் நிரப்ப முடியும் என்று சீமான் கூறியுள்ளார்.


சர்வதேச காணாமல் போனோர் தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. சென்னை நிருபர்கள் சங்கம் சேப்பாக்கத்தில்  அமைந்துள்ளது. இங்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு எந்தவித தகுதியும் இல்லாமல் போய்விட்டது. யார் யாரோ அரசியலுக்கு வருகின்றனர். வருவதாக கூக்குரலிட்டு கொண்டும் இருக்கின்றனர். சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு நிறைய பேர் வர ஆயத்தமாகி வருகின்றனர். 

நடிகர் விஜய் என் தம்பி போன்றவர். அவர் அரசியலுக்கு வந்தால் நான் மனமார ஏற்பேன். மேலும் நடிகர் சிம்பு எனக்கு மிகவும் பிரியமானவர். ஆடல், பாடல்,நடிப்பு இசை என அனைத்திலும் இருவரும் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகினால், அந்த இடத்திற்கு நடிகர் விஜய்யால் மட்டுமே வர இயலும். நடிகர் சிம்புவும், நடிகர் விஜய் போன்று வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.

ஆனால் அவரிடம் நேரம் தவறாமை இல்லை. அதனை அவர் சரி செய்துக்கொண்டால் மீண்டும் சினிமாவில் நல்ல முன்னேற்றம் அடைவார். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பேட்டி அளித்தார்.