ஒருநாள் தொடரை வென்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது நியூசிலாந்து அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.


டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 273 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் அதிகபட்சமாக 79 ரன்களை விளாசினார். ராஸ் டைலர் அவுட் ஆகாமல் 73 ரன்களை எடுத்தார்.

இந்தியாவின் சார்பாக சுழல் பந்து வீச்சாளர் சஹால் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 55 ரன்களை எடுத்தார். ஸ்ராயாஸ் ஐய்யர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களை மட்டுமே எடுத்து உள்ளது. இதனால் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.