இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து அணி! இந்திய பவுலர்களை தெறிக்கவிட்ட ராஸ் டைலர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் அபாரமாக விளையாடி 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி அவுட்டாகாமல் 88 ரன்களை குவித்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி யினர் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினார். அந்த அணியின் ராஸ் டைலர் அவுட்டாகாமல் அபாரமாக விளையாடி 109 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். தொடக்க ஆட்டக்காரர் நிக்கோலஸ் சிறப்பாக விளையாடி 78 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி வீரர் 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டினர். டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் படு தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணியினர் ஒருநாள் தொடரில் முதல் போட்டியிலேயே இந்தியாவை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.