நியூஸிலாந்து செய்த சிறப்பான சம்பவம்! இந்தியா மோசமான தோல்வி.

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காம் ஒரு நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணியின் வீரர்கள் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தெடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு பேட்ஸ்மேன் கூட நிலைத்து நின்று ஆடவில்லை.

இதனால் இந்திய அணி 30.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் சஹால் 18 ரன்களை எடுத்தார். நியூஸிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

சிறப்பாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தாலும் இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

மனைவி அனுஷ்கா உடன் கோலி ஊர் சுற்ற கிளம்பியதால் தான் நியுசிலாந்தில் இப்படி ஒரு அவமானம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது