நள்ளிரவில் செல்போனில் சேட்டிங்..! திடீரென வந்த கணவன்..! திருதிருவென விழித்த அனிதா சம்பத்! பிறகு நடந்தது?

பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் பிறந்தநாளையொட்டி அவரது கணவர் அவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது.


சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் இவர் செய்தி வாசிப்பதை பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்று கூறலாம். இவர் குறுகிய காலத்திலேயே பிரபலமானதால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அதன் காரணமாக சூர்யாவின் காப்பான் திரைப்படத்திலும், நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படத்திலும் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த வருடம் அனிதா சம்பத் திடீரென திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் தற்போது நடிகை அனிதா சம்பத் அவர்களுக்கு அவரது கணவர் சர்ப்ரைஸ் கொடுக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அனிதா சம்பத் ஹாலில் அமர்ந்துகொண்டு மொபைலில் சாட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவரது கணவர் பிறந்த நாள் கேக் உடன் உள்ளே நுழைகிறார். அவரைக் கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த அனிதா சம்பத் மிகவும் மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அனிதா சம்பத்தின் பிறந்தநாள் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.