ஓரம் கட்டப்பட்ட ஸ்டாலின்! லைவ் செய்யப்பட்ட பேட்ட டீசர்! ரஜினி பின்னால் அணிவகுத்த நியுஸ் சேனல்ஸ்!

சென்னையில் தி.மு.க ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கொடியேற்ற நிகழ்ச்சியை ஓரம்கட்டிவிட்டு ரஜினியின் பேட்ட டீசரை அனைத்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பின.


இன்று நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பேட்ட படத்தின்டீசர் காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல்சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் தி.மு.கவின் கொடியைஏற்றும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க தலைவர்மு.க.ஸ்டாலின் பங்கேற்று 114 அடி உயர கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  

   இந்தியாவில் உள்ளஎந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவிற்கு மிக மிக உயரமான கம்பத்தில் தி.மு.ககொடி பறக்கவிடப்படும் நிகழ்வுக்கு அக்கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகள்செய்திருந்தன. செய்தி தொலைக்காட்சிகள் இந்த நிகழ்ச்சியை நேரலை செய்வதற்கு வசதியாகதி.மு.கவே முன்னேற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. மேலும் ஹெலிகேம் உள்ளிட்டவசதிகளும் சிறப்பான காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    மேலும் தி.மு.கவின்ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளின் உயர்மட்ட நிர்வாகிகளைதொடர்பு கொண்டு ஸ்டாலின் கொடியேற்றும் போது நேரலை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். செய்திதொலைக்காட்சிகளும் ஸ்டாலின் கொடியேற்றுவதை நேரலை செய்வதற்கு தயாராகவே இருந்தன.ஆனால் ஸ்டாலின் கொடியேற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வரும் போது மணி காலை 11 மணிஆகிவிட்டது.   சரியாக காலை 11 மணிஅளவில் சன் தொலைக்காட்சியின் YOUTUBE பக்கத்தில் ரஜினியின் பேட்ட டீசர்வெளியிடப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிகள் அனைத்துமேகுறிப்பாக தந்தி டிவி, நியுஸ் 18, நியுஸ் 7, புதிய தலைமுறை என முன்னணிதொலைக்காட்சிகள் பேட்ட டீசரை ரிப்பீட் மோடில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டன. அதேநேரத்தில் ஸ்டாலின் 114 அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தனது கட்சி கொடியைஏற்றினார்.

   

   இதனை கலைஞர்தொலைக்காட்சி மட்டுமே நேரலை செய்து கொண்டிருந்தது. மற்ற அனைத்து செய்திதொலைக்காட்சிகளும் ரஜினியின் பேட்ட டீசரை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. ஒரு வழியாக ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு சென்றுவிட அதன் பிறகு அந்தகாட்சிகளை செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

   

    தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல்கட்சியின் தலைவரான ஸ்டாலின் தனது கட்சி அலுவலகத்தில் பிரமாண்ட கொடியேற்றியும் அதனைகண்டுகொள்ளாமல் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் பேட்ட டீசரைஒளிபரப்பியது ரஜினி ரசிகர்களுக்கு பெருமை அளிக்க கூடியதாக இருந்தது.


   அதே சமயம் அனைத்துதொலைக்காட்சிகளுக்கும் நேரலையாக கொடியேற்றத்தை ஒளிபரப்பும் ஏற்பாடு செய்துகொடுத்திருந்த தி.மு.க ஐ.டி விங்குக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கிவிட்டது.