தோழி..! நீங்க விளக்கு பிடிப்பீங்களா? நியூஸ் 7 திவ்யா கேட்ட கேள்வி! அதற்கு கலைஞர் டிவி பனிமலர் சொன்ன பதில்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நியூஸ் 7ன் செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி மற்றும் கலைஞர் டிவியின் பனிமலர் இவர்களுக்கு இடையே சமூக வளைதளத்தில் நடைபெற்ற விவாதம் வைரலாக பரவி வருகிறது.


சமீபத்தில் சன் நியூஸ் தொலைகாட்சியின் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி பற்றி தவறான முறையில் தனி விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. பின்பு அந்தக் கருத்து உடனடியாக அந்த பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் சன் நியூஸ் தொலைகாட்சியின் சமூக வலைத் தளத்தில் வெளியான செய்திக்கும், கலைஞர் டிவியில் பணிபுரிந்து வரும் பனிமலர் என்பவர் பகிர்ந்த கருத்திற்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகக் கூறி மீம்ஸ் ஒன்று பகிரப்பட்டது.

இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட கலைஞர் டிவியில் பணிபுரிந்து வரும் பனிமலர் என்பவர் 'என்னை சன் டிவி ஓனர் என்று சொல்லுங்கள்' என்று கூறியிருந்தார். அந்த பதிவிற்கு மற்றொரு தனியார் தொலைக்காட்சியான நியூஸ்7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வரும் திவ்யா துரைசாமி , பனி மலரை பார்த்து நீங்கள் விளக்கு பிடிப்பீர்களா? மாட்டிங்களா? என்று கேட்டார். அந்த பதிவிற்கு பதில் அளித்த பனிமலர் ஆபாசமாக பேசாதீர்கள் தோழி என்று கமெண்ட் செய்திருந்தார். 

இவர்கள் இருவரும் இப்படி பேசி வருவதை பார்த்து பல்வேறு நெட்டிசன்களும் அவர்களை கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.