திருமணமான 3வது நாள் இரவு! புது மனைவி செய்த செயல்! அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

திருமணமான 3-வது நாளிலேயே புகுந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை புதுப்பெண் ஒருவர் திருடி சென்றுள்ள சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கண்ஹய்லால்‌. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணுடன் 2 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்து நேற்று கண்ஹய்லாலின் உறவினர்கள் மொத்தம் 16 பேர் அவருடைய வீட்டில் தங்கி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அனைவரும் இரவு விருந்து உண்ட பிறகு பூஜா அவர்களுக்கு தேநீர் அளித்துள்ளார். 

தேனீர் அருந்திய அனைவரும் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளனர். இதனை உபயோகப்படுத்திக் கொண்ட பூஜாவும் அவரது சகோதரரும் வீட்டிலிருந்த 40 ஆயிரம் ரூபாய், விலைமதிப்பற்ற நகைகள் விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மறுநாள் காலையில் கண்ஹய்லாலின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அனைவரும் மயக்கமடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மயக்கமுற்ற 16 பேரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பூஜா மற்றும் அவருடைய சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.