எனக்கு வாந்தி வருது வண்டியை நிப்பாட்டுங்க..! திருமண ஊர்வலத்தில் புதுப்பெண் சொன்ன பகீர்..! அடுத்த அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்!

வாந்தி வருவதாக கூறி சமீபத்தில் திருமணமான பெண்ணொருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர் உறவினர்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷியோபூர் என்ற இடத்திற்கு வருகை தந்தனர். சாம்பல் ஆற்று பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புதுமண பெண்ணுக்கு வாந்தி வருவதாக கூறியுள்ளார். உடனடியாக உறவினர்கள் வாகனத்தை நிறுத்தினர். அப்போது எதிர்பாராத வகையில், புதுமணப்பெண் ஆற்று பாலத்திற்கு மேலிருந்து ஆற்றுக்குள் குதித்துவிட்டார். பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆற்று விழுந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஏன் அந்த பெண் கீழே குதித்தார் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை தற்கொலை முயற்சியாக இருக்கக்கூடும் என்ற வியூகத்தில் பெண்ணின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.