திருமணமாகி இரண்டே மாதம்..! கணவனிடம் இருந்து தப்பிய 19 வயது அம்ரின்! பென்னாகரம் பரபரப்பு!

திருமணம் நடந்து முடிந்த இளம்பெண் திடீரென மாயமாகியுள்ள சம்பவமானது பென்னாகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஆசிஃப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் அம்ரீன் என்ற 19 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

24-ஆம் தேதியன்று குளிப்பதற்கு சோப்பு வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிஃப் அவரை பல்வேறு இடங்களில் தேடி அடைந்துள்ளார். இருப்பினும் அம்ரீனை அவரால் தேடி கண்டுபிடிக்க இயலவில்லை.

பல இடங்களில் குடும்பத்தினருடன் இணைந்து தேடியும் மனைவியை கண்டுபிடிக்க இயலாததால், ஆசிஃப் பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.