பரோட்டோ சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் போனில் பேசிய புதுமாப்பிளை பரலோகம் போன பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்!

மனைவியுடன் போனில் பேசிக்கொண்டு பரோட்டா சாப்பிட்ட புது மாப்பிள்ளை இறந்துபோன சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவடிக்குப்பம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதிக்கு அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில்  உள்ள கார் ஷோரூமில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரி என்னும் பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் சண்முகசுந்தரி தன் தாயார் வீட்டிற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் சென்றார். புருஷோத்தமன் தன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்றிரவு புருஷோத்தமன் ரோட்டு கடையில் பரோட்டா வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மனைவி சண்முகசுந்தரி அவருக்கு போன் நடித்துள்ளார்.

சாப்பிட்டு கொண்டே சந்தோஷமாக இருந்த புருஷோத்தமனுக்கு தொண்டையில் பரோட்டா சிக்கி கொண்டது. அவரால் எதுவும் பேச முடியவில்லை. மறுபக்கத்தில் இருந்து சண்முகசுந்தரி எவ்வளவு சத்தம் போட்டும் எந்தவித பயனுமில்லை. இதனால் பயந்த சண்முகசுந்தரி அருகே இருந்த தன் உறவினர்களுக்கு போன் செய்து புருஷோத்தமன் வீட்டிற்கு வர செய்தார்.

பூட்டிக்கிடந்த வீட்டை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த புருஷோத்தமனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பரோட்டா சாப்பிட்டு புதுமாப்பிள்ளை இறந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.