திருமணமாகி ஒரே வாரம்! மனைவி முன் உடல் சிதறி பலியான கணவன்! ஹனிமூன் பயங்கரம்!

பாராகிளைடிங் சென்ற புது மாப்பிள்ளை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவமானது மணாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அமைந்தகரையில் திரௌபதி அம்மன் கோவில் தெரு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு அரவிந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 27. இவருக்கும் சென்னையை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக இருவரும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலிக்கு சென்றனர். அங்குள்ள பல்வேறு சுற்றுலா தளங்களை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மணலி அருகே உள்ள டோபி என்னும் பகுதியில் பாராகிளைடிங் மிகவும் பிரபலமானது. இங்கு பாராகிளைடிங் செய்வதற்காக அரவிந்த் டிக்கெட் பதிவு செய்திருந்தார். அதன்படி நேற்று ஹரு ராம் என்ற விமானியுடன் பறந்தார். 

அரவிந்த் பாராகிளைடிங் செய்வதை அவருடைய மனைவி ப்ரீத்தி கீழே இருந்து ரசித்து கொண்டிருந்தார். சிறிது நேரம் பறந்த பின்னர் அரவிந்தின் பாதுகாப்பு பெல்ட் கழுண்டுள்ளது. உடனடியாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பள்ளத்தில் விழுந்ததால் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அரவிந்த் உயிரிழந்தார். 

அவர் கீழே விழுந்தவுடன் பாராகிளைடிங் நிலை தடுமாறியது. அவசர அவசரமாக தரையிறக்க முயன்றதால் ஹரு ராமுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்முன்னையே கணவர் இறந்து போனதை கண்டு ப்ரீத்தி கதறி அழுது கொண்டிருந்தார். மேலும் அரவிந்தின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அரவிந்தின் மனைவி பிரீத்தி அளித்த புகாரின் பேரில் 336 மற்றும் 304 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாதுகாப்பு பெல்ட்டை சரியாக அணியாததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது டோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.